ஜூன் 18-இல், 10 மாநிலங்களில் காலியாகவுள்ள 24 மாநிலங்களவை எம்.பி.களுக்கான தேர்தல்..! - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதியும், சி.வி. சண்முகம், சுனேத்ரா பவார் ஆகியோரின் ராஜினாமாவை தொடர்ந்து, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் இதே தேதியில் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஆறு ஆண்டுகளைக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்தவர்களுக்கு மாற்றாக புதிய உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேர் அடுத்த மாதம் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்யவுள்ளனர். இதயனையடுத்து, புதிதாக 24 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா 04 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 03 இடங்களுக்கும், ஜார்க்கண்ட்டில் 02 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

அத்துடன், தமிழகத்தில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவைப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேப்போன்று, மகாராஷ்டிராவின் துணை முதல்வர் சுனேத்ரா பவார் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இதனால், இவ்விரு மாநிலங்களிலும் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தேர்தல் அறிவிக்கை ஜூன் 1ந் தேதி வெளியிடப்படும் என்றும், அன்று தேர்தல் நடைமுறைகள் முறையாக தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 08 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து, ஜூன் 18-ஆம் தேதி காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நள்ளிரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On June 18 elections for 24 Rajya Sabha MP seats vacant across 10 states


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->