எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.!  - Seithipunal
Seithipunal


அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால், அவற்றை நிராகாிக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த கடிதம் பரிசீலனையில் உள்ளதாக, தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்தாவது. 

"நேற்று முன்தினம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் மூலம் கடிதம் கிடைத்தது. வேறு யாரும் எந்தக் கடிதமும் என்னிடம் வழங்கவில்லை. 

ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் இருக்கிறது. தற்போது இந்த கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்தக் கடிதம் தொடர்பாக சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.


ஓ.பன்னீர்செல்வத்தின் அந்த கடிதத்தில், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவினர் பொறுப்பில் உள்ளனர். இதுகுறித்து மனுக்கள் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்.

அதிமுக பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை என்பதால், உயர்நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது" என்று சுட்டிக்காட்டி அந்த கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே சமயத்தில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அப்படி எதுவும் வரவில்லை என்று சொல்லி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oips letter issue appavu press meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->