உண்மையில், திமுகவுக்கு ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்கள்தான் பிரச்சினையே ஒழிய, ஆளுநர் பதவி இல்லை - இடும்பாவனம் கார்த்தி!
ntk idumbavanam karthi dmk mk stalin governor rn ravi
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு? எனும் அண்ணாவின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டும் திமுக.
உண்மையில், திமுகவுக்கு ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்கள்தான் பிரச்சினையே ஒழிய, ஆளுநர் பதவி இல்லை.
மத்திய அமைச்சரவையில் 18 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தபோது ஆளுநர் பதவியை நீக்கம் செய்யவோ/ அதிகாரத்தைக் குறைக்கவோ/ மசோதா, தீர்மானத்துக்கு ஒப்புதல் தருவதற்கான காலக்கெடுவைத் நிர்ணயம் செய்யவோ திமுக எடுத்த முன்னெடுப்பு என்ன? ஒன்றுமில்லை!
2006ஆம் ஆண்டு கேபிள் மசோதாவை அதிமுகவின் ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்தபோது அன்றைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை நேரில் சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது என வலியுறுத்தியவர்தானே கருணாநிதி" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ntk idumbavanam karthi dmk mk stalin governor rn ravi