"மக்களின் ஒரு ரூபாயைக் கூடத் தொட மாட்டேன்" - தமிழக முதலமைச்சராக விஜய்யின் நேர்மைச் சபதம்!
Not a Single Rupee From Public Funds CM Vijay Integrity Pledge as Tamil Nadu 14th Premier
தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக இன்று பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய், தனது அமைச்சரவையுடன் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர் திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், தனது நிர்வாகக் கொள்கைகளை அவர் அதிரடியாகப் பகிர்ந்தார்.
"மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாயைக் கூடத் தொடமாட்டேன்; என் கூட இருப்பவர்களையும் தவறு செய்ய விடமாட்டேன்" என நேர்மைக்கு இலக்கணம் வகுத்தார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், தன் தலைமையில் மட்டுமே ஒற்றை அதிகார மையம் இயங்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண் பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை அளித்து, நேர்மையான சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டப்போவதாக முதல்வர் விஜய் உறுதிபூண்டுள்ளார்.
English Summary
Not a Single Rupee From Public Funds CM Vijay Integrity Pledge as Tamil Nadu 14th Premier