அண்ணாமலைக்கு செக்! பின்னணியில் நிர்மலா! போட்டு கொடுத்த பாஜக நிர்வாகிகள்!
Nirmala submitted statement regarding TNBJP officials comments
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக தலைமைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், தமிழக அரசியல் கட்சிகளுடன் அண்ணாமலை கொண்டுள்ள தொடர்பு, பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை அணுகுமுறை குறித்து நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அதிமுக இல்லாமல் பாஜக கூட்டணி அமைக்க முடியுமா என்பது குறித்தும் அறிக்கையில் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தேசிய தலைமை உத்தரவின் பேரில் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் யாத்திரையைக்கு இடையே நாளை டெல்லி பாஜக தலைமையை சந்திக்க உள்ளார். நிர்மலா சீதாராமன் தக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் டெல்லி தலைமை ஆலோசனை ஈடுபட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Nirmala submitted statement regarding TNBJP officials comments