தமிழக அரசியலில் புதிய திருப்பம்: எடப்பாடி மீது அமித் ஷா கோபம்.. விஜய் பக்கம் திரும்பும் பாஜக? பொங்கலுக்கு வர போகுது மிக பெரிய மாற்றம் - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குள் அரசியல் களத்தில் இன்னும் பல ட்விஸ்ட்கள் அரங்கேறும் என்றே தெரிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அந்த அணிக்குள் தொடர்ச்சியாக குழப்பங்களும், பின்னணி நாடகங்களும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சில மாதங்களில் நடைபெற உள்ள 2026 சட்டசபைத் தேர்தலில், தமிழ்நாட்டில் தனது அரசியல் இருப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக திரைமறைவு முயற்சிகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்பது வாக்குப் பிரிவை ஏற்படுத்தும் என்பதால், தவெகவை தங்களுடன் இணைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது, “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெறும் போட்டியிடுவது போதாது; வெற்றி பெறுவதுதான் முக்கியம்” என திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல், 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. இந்த அனுபவங்களே, 2026 தேர்தலில் வாக்குப் பிரிவை எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு பாஜக தலைமையை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அரசியல் சக்திகள் சிதறி இருப்பதே பாஜகவின் கவலையாக உள்ளதாம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்புகள் ஒரு பக்கம், விஜய்யின் தவெக இன்னொரு பக்கம் என எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதால், ஒருங்கிணைந்த எதிர்ப்பை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் நிறைவேறாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாகவே, தமிழகத்திற்கு வந்த போதும் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

இதற்கிடையே, சமீப காலமாக காங்கிரஸ் – தவெக கூட்டணி குறித்த பேச்சுகள் அதிகரித்ததும், பாஜக தரப்பில் அவசரத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெக தரப்பில் இருந்து வெளியான கருத்துகளில், “மதச்சார்பின்மை மற்றும் மதவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இயற்கையான கூட்டணிக் கட்சிகள். ராகுல் காந்தியும் எங்கள் தலைவர் விஜயும் நண்பர்கள்” என கூறப்பட்டிருந்தது பாஜக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாகவே, விஜய்யை விரைவாக தங்கள் அணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், “தேர்தல் கூட்டணிகள் சென்டிமென்ட் அடிப்படையில் அல்ல; வாக்கு விகிதம் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்” என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், 2026 தேர்தல் திமுக கூட்டணி vs தேசிய ஜனநாயக கூட்டணி என்ற இரு முனைப் போட்டியாக மட்டுமே இருக்க வேண்டும்; வாக்குகள் பிரிவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனாலேயே, பொங்கலுக்கு முன்பாக ஒரு மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பின்னணியில்தான், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் அமித் ஷா தமிழ்நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றது, அரசியல் அரங்கில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஒரே அணிக்குள் ஒருங்கிணைக்க வேண்டும், வாக்குப் பிரிவை எந்த நிலையிலும் தவிர்க்க வேண்டும் என்பதற்கான அரசியல் செய்தியையே இந்த நடவடிக்கை மூலம் அமித் ஷா அனுப்பியுள்ளதாகவும் பேசப்படுகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இன்னும் பல அதிரடி திருப்பங்களை காணும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New twist in Tamil Nadu politics Amit Shah angry with Edappadi Will BJP turn to Vijay A big change is coming for Pongal


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->