4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்: 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – மத்திய அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடப்பில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களைச் சீரமைத்து ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது 40 கோடி தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்க மோடி அரசு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

அமலான 4 சட்டங்கள்

ஊதிய விதி, 2019
தொழில் துறை தொடர்பு விதி, 2020
சமூகப் பாதுகாப்பு விதி, 2020
பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020

முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்கள்

இந்தச் சட்டங்களின் மூலம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திற்கேற்றவாறு தொழிலாளர் நலனில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது:

சமூகப் பாதுகாப்பு: 'கிக்' (Gig) மற்றும் 'பிளாட்பார்ம்' (Platform) தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் ஊழியர் காப்பீட்டு நிறுவன (ESI) சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சம ஊதியம்: பாலினப் பாகுபாடின்றி சம வேலைக்குச் சம ஊதியம் கட்டாயம்.

சலுகைகள்: நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிகராக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விடுமுறை, மருத்துவச் சலுகைகள் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் நீட்டிப்பு.

வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்: அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணி நியமன ஆணை கட்டாயம்; ஐ.டி. ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். கூடுதல் பணி நேரத்துக்கு இருமடங்கு ஊதியம் வழங்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு: அனைத்து வகையான பணிகளிலும் பெண்கள் இரவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் வர்த்தக சங்கங்களின் கருத்து

பிரதமர் மோடி, இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் என்றும், இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆனால், 10 வர்த்தக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு இந்தச் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new labour law central govt


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->