நாதக சீமான் ட்விட்டர் முடக்கம்.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
MK Stalin condolences to Twitter for NTK seeman Twitter issue
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியின் பல நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் நேற்று இரவு அடுத்தடுத்து முடுக்கப்பட்டது
இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பி உள்ளனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!" என் தெரிவித்துள்ளார்.
English Summary
MK Stalin condolences to Twitter for NTK seeman Twitter issue