முதலமைச்சர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு! முடிவுக்கு வருமா ஜாக்டோ-ஜியோ போராட்டம்?
Minister Sengottaiyan meet in Edappadi Palanisamy
ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும். 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இன்று 5-ஆவது நாளான மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு. ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று ஆசிரியர்கள் போராட்டம் முடுவுக்கு வருமா? என்பது இவர்கள் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும்.
English Summary
Minister Sengottaiyan meet in Edappadi Palanisamy