தமிழ்நாட்டில் திமுக பலமுறை தோல்வியை சந்தித்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!
Minister L murugan reply to mk Stalin for Karnataka assembly election
திராவிட மண்ணில் பாஜக வளர முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருவதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிட மண்ணிலிருந்து பாஜக விரட்டி அடித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதிலளித்தார். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். அந்த வகையில் தமிழகத்தில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளது.
ஒரு தேர்தல் தோல்வி வைத்துக்கொண்டு எதையும் கூற கூடாது. திராவிட மண்ணில் பாஜக வளர முடியாது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister L murugan reply to mk Stalin for Karnataka assembly election