முக அழகிரி இணைய போகும் கட்சி.. முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்.! அதிர்ச்சியில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மகளிர் வாக்கு சாவடி முகவர் குழுவின் தென்மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜு, தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் நகரில் அதிமுகவின் மகளிர் வாக்குசாவடி முகவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முன்வந்த தயாரிப்பாளர்களை பாராட்டுகிறேன்.

அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். மகளிர் அனைவரும் பூத் வாரியாக உள்ள புதிய வாக்காளர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்கள். வயது வித்தியாசம் பாராமல் புதிய வாக்காளர்களிடம்ம் ஆதரவாக பேசிய ஆதரவு திரட்ட வேண்டும். அதிக வாக்குகளை கிடைக்கும் அளவிற்கு பணியாற்ற வேண்டும். 

அப்படி நீங்கள் செயல்பட்டால், வரப்போகும் தேர்தலில் பெண்களுக்கான வார்டில் கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்களில் வாய்ப்பு அளிக்கப்படும். மகளிர் குழுவினரிடம் பாசறை நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் முக அழகிரி விரைவில் மாற்றுக் கட்சியில் இணைய உள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kadambur raju says about mk alagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal