அதிமுக-வுக்கு விழுந்த மெகா இடி...! சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தவெக-வில் இணைகிறார்களா...?
mega blow AIADMK C Vijayabaskar and MR Vijayabaskar joining Tvk
அதிமுகவில் அடுத்தடுத்து உருவாகி வரும் அரசியல் பரபரப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவது, எதிர்க்கட்சித் தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக, திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவின் ஒரு பிரிவு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின்மீது அதிருப்தி தெரிவித்து தனி அணியாக செயல்பட தொடங்கியது.

இந்த அணியில் இருந்த சிலர் தங்களது ராஜினாமா கடிதங்களையும் அளித்தனர்.பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக திரும்பினர். ஆனால், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்ந்து தனித்த நிலைப்பாட்டில் இருந்து வந்தனர்.
இந்த சூழலில், அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய முகங்களாக கருதப்பட்ட சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி. விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நடிகரும் இயக்குநருமான K. Bhagyaraj மறைவு காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் நாளை மறுநாள் (2-ஆம் தேதி) தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த வளர்மதி ஆகியோரும் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தொடர்ச்சியாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.இந்த தொடர் விலகல்கள் கட்சித் தலைமையை மட்டுமல்லாது, அடிப்படை தொண்டர்களிடையிலும் கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
mega blow AIADMK C Vijayabaskar and MR Vijayabaskar joining Tvk