WhatsApp- இல் புதிய அப்டேட்; இனிமேல் Google Pay, PhonePe இல்லாமல் கரண்ட், கேஸ், FASTag பில் கட்டலாம்; மெட்டா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பயனாளிகளின் வசதிகளை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இனிவரும் காலங்களில் வாட்ஸ் அப் செயலியில் மின்சாரம், கேஸ், ஃபாஸ்டேக் (FASTag), இன்சூரன்ஸ், கடன் தவணைகளை செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

மத்திய அரசின் பாரத் கனெக்ட் (Bharat Connect) நெட்வொர்க் உடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில், 22 ஆயிரத்து 700-க்கும் அதிகமான சேவை நிறுவனங்களின் பில்களை வாட்ஸ் அப் செயலியிலேயே செலுத்தும் வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, இனிமேல் வாட்ஸ் அப் செயலி மூலம் மின்சாரம், கேஸ், தண்ணீர், ஃபாஸ்டேக் (FASTag), இன்சூரன்ஸ் மற்றும் கடனுக்கான EMI ஆகியவற்றை எளிதாக செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.

குறிப்பாக, UPI, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்த முடியும் என அறிவித்துள்ள அந்நிறுவனம், பழைய பில்களை பார்ப்பது, சேவை வழங்குபவர்களின் விவரங்களை சேமித்து வரவிருக்கும் கட்டணங்களை கண்காணிப்பது உள்ளிட்ட வசதிகளையும் பெற முடியும் எனவும் கூறியுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப் பயனாளர்கள், செயலியின் Home Screen-இன் டாப் கார்னரில் உள்ள ரூபாய் Symbol-ஐ அழுத்தி இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meta announces that you can pay electricity gas and FASTag bills on WhatsApp


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->