நாடு முழுவதும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது - மதிமுக வைகோ.!
MDMK Vaiko speech about BJP and parliment election
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அண்ணா அறிவாலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கையெழுத்து இயக்கம் வெற்றி பெற வாழ்த்து பெற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆளுநரை திரும்ப பெறக் கூறி நேற்று துவங்கிய கையெழுத்து இயக்கம் அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் மீண்டும் மத்தியில் பாஜக அரசு வராத அளவுக்கு ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாத என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு படையெடுத்து வந்தாலும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
MDMK Vaiko speech about BJP and parliment election