மோடி-மம்தா ஒரே மேடையில்.! கூட்டத்தில் நடந்த சம்பவம்.! வைரல் ஆகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் சார்பாக பிரதமர் மோடியின் தலைமையில், நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் மத்திய அரசின் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள ஆளுநர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "இது அரசு விழாவாக நடைபெறவில்லை. அரசு விழாவுக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை பங்கேற்க அழைத்து விட்டு பின், அவமரியாதை செய்யக்கூடாது. எனது போராட்டத்தின் வெளிப்பாடாக நான் இந்த நிகழ்ச்சியில் பேசப்போவதில்லை. ஜெய் ஹிந்த்., ஜெய் வங்காளம்.," என்று உரையாற்றினார்.

முன்னதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் அருகே பேசுவதற்காக வந்தபோது, கூடியிருந்த கூட்டத்தில் ஒரு சிலர் ஜெய்ஸ்ரீராம்., ஜெய்ஸ்ரீராம்., என்று கோஷமிட்டனர்.

இதனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கோபத்துக்கு உள்ளாக்கினார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 'மம்தா பேனர்ஜி கோ ஜெய் ஸ்ரீ ராம்' என்ற #MamtaBanerjeeKoJaiShriRam ட்ரெண்ட் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamta Banerjee Ko Jai Shri Ram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal