கஞ்சா போதை ரெயிலில் ரீல்ஸ்… அரிவாளுடன் சிறுவர்கள்! - சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சுட்டிக்காட்டி முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி
making reels train boys machetes Edappadi Palaniswami criticized Chief Minister pointing deterioration law and order
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"சென்னையிலிருந்து திருத்தணி நோக்கிச் சென்ற ரெயிலில், கையில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்த 17 வயதுடைய நான்கு சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞர்மீது, அந்த சிறார்கள் அரிவாள்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் ஒவ்வொன்றும் மனித மனசாட்சியை உறைய வைக்கும் வகையில் உள்ளன. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில், பட்டாக்கத்தியும் அரிவாளும் இருப்பது தமிழக சமூகத்தின் ஆபத்தான சரிவை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டை இத்தகைய கொடூர நிலைக்கு தள்ளியிருப்பது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.அரிவாளுடன் தாக்குதல் நடத்திய அந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வெறும் 17 வயதிலேயே போதைப்பொருளும் கொலை ஆயுதங்களும் எளிதில் கிடைக்கும் நிலைக்கு யார் பொறுப்பு? சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதற்கும், மாநிலத்தின் எதிர்காலத்தை சீரழித்ததற்கும் இந்த பொம்மை முதல்வர் அல்லவா?
இளைஞர்களின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, மேடைமேடையாக ஏறி வெற்று பெருமை பேசுவதால் என்ன பயன், முதல்வர் ஸ்டாலின் அவர்களே? தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்தாடும் நிலையில், அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே சமயம், இப்படியான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் கடத்தலையும் கட்டுப்படுத்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உடனடியாகவும் கடுமையாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
English Summary
making reels train boys machetes Edappadi Palaniswami criticized Chief Minister pointing deterioration law and order