மதுரைக்காரரின் சம்பவம்! பாஜகவின் முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கிய அதிமுக!
Madurai BJP district vice president joins AIADMK
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமாக கருதப்பட்ட அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் தனது நிலைப்பாட்டை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மதுரை மாவட்ட துணைத் தலைவராக இருந்த ஜெயவேலு மீண்டும் அக்கட்சியில் இருந்து விலகி சுமார் 500க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
மேலும் மதுரை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் பாரி, பாஜகவின் செயற்குழு உறுப்பினர்கள், தேமுதிவை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வகுமார் ஆகியோருடன் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக்கொண்டு பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேலு அவர்கள் பாஜக செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதேபோன்று ஜெயவேலுவின் ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைய ஆர்வமாக உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிடம் தேதியை உறுதி செய்துவிட்டு அதிமுகவில் இணைந்த அனைவரையும் அழைத்துச் செல்ல உள்ளேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Madurai BJP district vice president joins AIADMK