எடப்பாடிக்கு அடுத்த சிக்கல்!! கே.சி பழனிச்சாமி தொடந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
MadrasHC orders to EPS respond to KC Palaniswami deformation case
அதிமுக போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாக பணம் வசூல் நடப்பதாக அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்த நிலையில் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கே.சி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீட்டு மனுவில் "எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தவறானது" அதில் குறிப்பிடப்படப்படிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது கே.சி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
MadrasHC orders to EPS respond to KC Palaniswami deformation case