ஓபிஎஸ்-க்கு செக்! இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
MadrasHC orders OPS to respond in EPS case
அதிமுகவில் இருந்த இரட்டை தலைமை பதவிகள் ஒழிக்கப்பட்டு மீண்டும் ஒற்றை தலைமை பதவி அதிமுக பொதுக்குழு கூடி கொண்டு வந்தது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அனைத்து வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் பொதுக்குழுவில் நிறைவுற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்தது.

இருப்பினும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் இருக்கும் நேரத்தில் இது போன்ற குழப்பங்களால் தொண்டர்கள் பாதிக்க கூடும் என்பதால் அதிமுகவின் கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற உரிமையியல் நீதிபதி மஞ்சுளா அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மஞ்சுளா அக்டோபர் 6ம் தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினம் பொத்தி வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்யும் பதில் மனுவை பொறுத்து இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்படுமா என்பதை நீதிபதி முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
MadrasHC orders OPS to respond in EPS case