சீர்கெட்டு போய் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கை நெறிப்படுத்த வேண்டும்...! - முதலமைச்சருக்கு நயினார் மகேந்திரன் வலியுறுத்தல்
law and order should be regulated Nayinar Mahendran urges tn Chief Minister
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதவது,"ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
law and order should be regulated Nayinar Mahendran urges tn Chief Minister