அவசர கோரிக்கையுடன் முதல்வரை சந்தித்த லதா ரஜினிகாந்த்...!  - Seithipunal
Seithipunal


நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்து இருக்கின்றார். இந்த சந்திப்பானது, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

சில நாட்களுக்கு முன்பாக தமிழத்தை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய சம்பவம் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம். இதன் காரணமாக லதா ரஜினிகாந்த் குழந்தைகளை காப்பாற்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பேட்டியளித்தார். 

 

சில நாட்களுக்கு முன்பு இது குறித்து தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கலந்தாலோசித்தார். இதனை தொடர்ந்து, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லதா ரஜினிகாந்த் நேரில் சந்தித்து குழந்தைகளை காப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதன் காரணமாக குழந்தைகளை காப்பதற்காக அமைப்பு உருவாக்கப்பட்டால், அதற்கு தலைவராக லதா ரஜினிகாந்த் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது. அனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ladha rajinikanth meet with cm


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal