மத்திய அமைச்சர் எல் முருகன் நரிக் குறவர் இன மக்களுடன் சந்திப்பு.!  - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் எல் முருகன், புதுவையில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, வில்லியனூர் கூடப்பாக்கம் சாலையில் வசிக்கும் நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

மத்திய மந்திரியிடம் நரிக்குறவர்கள் மனைப்பட்டா வழங்கி, அடிப்படை வசதி செய்து தரக்கோரினர். இதற்கு அவர், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

இதன் பின்னர், வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டார்.  தொடர்ந்து அங்கு நடக்கும் பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். 

அப்போது, மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழா நடத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று ஆயுர்வேத மருத்துவத்துறை இயக்குனர் ஜெயந்தி தெரிவித்தார்.  

மேலும், இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் மோகன்குமார், மாவட்டத் தலைவர் ஆனந்தன், தொகுதி பொறுப்பாளர்கள் கண்ணபிரான், செந்தில்குமரன், மாவட்ட துணைத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

l murugan meet narikuravar people


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->