ஸ்டிக்கர் ஒட்டமா, வெள்ளை அறிக்கை வெளியிடுங்க... CM ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
L Murugan DMK Govt MK Stalin
திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பதை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக கூற வேண்டும் என்றும், அதன் விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை உள்ளது என்றும் எல்.முருகன் வலியுறுத்தினார்.
மேலும், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் திமுக அரசு செய்கிற விளம்பரங்கள் பெரும்பாலும் போலி ஊக்கத்துடன் நடைபெறும் எனவும், உண்மையான வளர்ச்சியை மறைக்கும் முயற்சி எனவும் கூறினார்.
தென்மாவட்டங்களில் வளர்ச்சி திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கம், ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளிட்டவை மத்திய அரசின் வழியேவே வந்துள்ளன என்றும், அவற்றில் தங்கள் பங்கில்லாமல் திமுக அரசு பெயர் பதிக்கும் 'ஸ்டிக்கர்' அரசாகவே செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
மக்கள் உண்மைத் தகவல்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தமது கோரிக்கை என கூறிய எல்.முருகன், முதலீட்டின் பெயரில் நடை பெறும் விளம்பரங்களுக்குப் பதிலாக கணக்குகளுடன் கூடிய முழுமையான அறிக்கையைத் திமுக அரசு வெளியிட வேண்டும் என்றார்.
English Summary
L Murugan DMK Govt MK Stalin