''ராவணன் தலை போல் மீண்டும் மீண்டும் முளைக்கும் ஆபாச வீடியோக்கள்'' சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி..! - Seithipunal
Seithipunal


ஆப்பரேஷன் சிந்தூரின் போது சட்டவிரோத இணையதளங்களை முடககியது போல், ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ' தான் கல்லூரி படித்த போது, ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்ட நிலையில், அவர் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததை நம்பி அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அந்த நேரத்தில்  காதலன் அவனது மொபைல்போனில் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்ததக தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்கள், ஆபாச வலைதளங்கள், சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து, குறித்த பெண்ணின் நண்பர் சொன்ன பின்னர் தான், காதலுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து, அவற்றை இணையதளங்களில் அவன்பதிவேற்றியது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்ததாகவும், உடனடியாக சமூக வலைதளங்கள், இணையதளங்கள், ஆபாச வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்களை முடக்கி, நீக்கவும், எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூன் 18-இல் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தமிழக டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்துள்ளதாகவும், குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை, இணையதளத்தில் இருந்து, 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பெண் வழக்கறிஞர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ' ஆபாச வீடியோக்கள் மேலும் 13 இணையதளங்களில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், ராவணனின் தலை வெட்டப்பட்ட பிறகு மீண்டும் மீண்டும் முளைப்பது போல் வெளியாகும் பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோக்கள் வெளியாகின்றன. ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆப்பரேஷன் சிந்தூரின் போது சட்டவிரோத இணையதளங்களை முடக்கியது போல் இதிலும் செய்ய வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pornographic videos sprouting like Ravanas head again and again says Madras High Court


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->