திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... விஜயை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கரூர் சம்பவம், திமுக மற்றும் தவெக குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

கரூர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திமுக, தவெக-வை அரசியல் ரீதியாக ஒடுக்க முயலுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது கலைஞர் பல வழக்குகளை தொண்டர்கள் மீது போட்டார். அதன்மூலம் கட்சியை அடக்க முயன்றார். ஆனால் மக்களும் தொண்டர்களும் எம்ஜிஆர் பின்னால் ஒன்றுபட்டு நின்றனர். அதிமுக வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை” என்றார்.

அதேபோல், திமுக தற்போது தவெக மீது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எம்ஜிஆர் காலத்தை நினைவூட்டுவதாக அவர் கூறினார்.

“விஜய் கட்சிக்கு இது ஒரு நெருக்கடி அல்ல. மாறாக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தவெக-க்கே ஆபத்து. விஜய் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவார் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் தியேட்டர்கள் திமுக ஆதிக்கத்தில் உள்ளதால் அதுவும் சாத்தியம் தெரியவில்லை. எனவே, மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தான் விஜய்க்கு சரியான முடிவு” என்று ராஜு வலியுறுத்தினார்.

மேலும், “எம்ஜிஆர் தனது தொண்டர்களின் நலனுக்காக எடுத்த முடிவுகள் இன்று வரலாறாகியுள்ளன. அதே பாதையை விஜய் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்” என அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay ADMK Selur raju DMK


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->