உள்குத்து, ஊமைகுத்து வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
RB Udhaya Kumar ADMK 2021 and 2026 election
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவிக்கையில், "
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. சட்டபூர்வமான பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் நாங்கள் உள்ளோம். கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தார். 43 தொகுதிகளில் மொத்தம் 1,92,000 வாக்குகளே பின்தங்கினோம். அதுதான் ஆட்சிமாற்றத்திற்குக் காரணம்.
ஐந்தரை கோடி வாக்காளர்களில் அந்த ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் கூட அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள்தான் ஆட்சியில் இருந்திருப்போம்.
‘உள்குத்து, ஊமைகுத்து என்றால் என்ன?’ என்று கேட்டீர்களா? அதை வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும்,” என்று அவர் சிரித்தபடி கூறினார்.
தற்போது பருவமழை காலம் என்பதால் மக்களை பாதுகாப்பது முக்கியம் என அவர் குறிப்பிட்டார். “மக்களின் உயிர் பாதுகாப்பு எங்கள் கடமையும் பொறுப்பும். கூட்டணி பற்றிய விவாதங்கள் பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குப் பிறகே வரலாம். அப்போது பேச வேண்டியவர்கள் பேசுவார்கள். நாங்கள் சொல்லியோ, நீங்கள் கேட்டோ எதுவும் முடிவதில்லை. பேச வேண்டியவர்கள் பேசினால் தான் முடிவுகள் வரும். நல்லதே நடக்கும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
RB Udhaya Kumar ADMK 2021 and 2026 election