கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
CBI investigation Karur incident TVK DMK Anbil Mahesh
கரூர் சம்பவம் திட்டமிட்டதாக நடந்ததா இல்லையா என்பது சிபிஐ விசாரணையில்தான் வெளிவரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரை தெரிவிக்கையில், “வாக்குச்சாவடி உதவி அலுவலர்கள் (பிஎல்ஏ 2) என்பது, எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உதவியாகச் செல்பவர்கள் மட்டுமே. அவர்கள் மக்களைப் பாதிக்க முடியாது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் எஸ்ஐஆரை விமர்சிக்கிறார்கள்.
நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதனால், எஸ்ஐஆர் முறையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார்.
மேலும், புதிய பாடத்திட்டம் தயாரிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், “போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பது உள்ளிட்ட துறைகளை மையப்படுத்தி பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்,” என்றார்.
கரூர் சம்பவம் குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணையின் மூலம் சம்பவம் திட்டமிட்டதா இல்லையா என்பது வெளிச்சம் பார்க்கும் என்றும் கூறினார்.
அதோடு, புதிதாக 13 அரசு பள்ளிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடக்கத்தில் மண்டபங்கள் போன்ற இடங்களில் பள்ளிகள் இயங்கும், பின்னர் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என்றார்.
மேலும், பள்ளிகளின் நுழைவாயில்களில் சிசிடிவி அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அக்கவுண்டன்சி தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
CBI investigation Karur incident TVK DMK Anbil Mahesh