விஜயகாந்த செய்த அந்த தவறை நான் செய்யமாட்டேன்... சீமான் பரபரப்பு பேட்டி!
NTK Seeman DMDK Vijayakanth
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கலந்தாய்வு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவிக்கையில், "கூட்டணிக்காக காத்திருக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம். களத்தை மாற்றும் புதிய அரசியலை உருவாக்கும் பணியில் இருக்கிறோம்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியலில் ஈடுபடாமல் 35 லட்சம் மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அது விரைவில் 60 லட்சமாகவும், பின்னர் ஒரு கோடியாகவும் உயரும் என நம்புகிறேன். மாற்றம் மெதுவாகவே வரும்; அவசரப்பட முடியாது. நான் மக்களிடம் ‘கசாயம்’ கொடுத்து வருகிறேன், அது மெதுவாகவே செயல்படும்.”
“கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன். மாற்று அரசியலைப் பேசிவிட்டு பழைய கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் அது ஏமாற்றமே. விஜயகாந்த் தனித்து 10 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஆனால் கூட்டணி அமைத்த பிறகு அவரது வாக்கு சதவீதம் சரிந்தது. அதுபோல் நான் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டேன்,” என்றார்.
“எந்தத் தேர்தலிலும் நாம் தனித்து நிற்போம். அதிலிருந்து வலிமை பெறுவோம், மக்கள் நம்பிக்கையுடன் நம்மை ஆட்சிக்கு கொண்டுவருவார்கள்” என சீமான் உறுதியாக தெரிவித்தார்.
English Summary
NTK Seeman DMDK Vijayakanth