ரெயில்வே பயணிகள் மீது கொடூர தாக்குதல்! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது நிஹால் என்ற இளைஞர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது குடும்பத்தினருடன் உத்தரப் பிரதேசத்தின் கத்ராவில் இருந்து மத்திய பிரதேசம் பினா நோக்கி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

பயணத்தின் போது அவர் ரெயிலின் கேட்டரிங் சேவையில் சைவ உணவு ஆர்டர் செய்தார். உணவின் விலை ரூ.110 ஆக இருந்தும், கேட்டரிங் ஊழியர்கள் ரூ.130 வசூலித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிஹால், ஏன் அதிகமாக வசூலிக்கிறீர்கள் என்று கேட்டதுமே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த விவாதம் வன்முறையாக மாறியதில், ஆத்திரமடைந்த கேட்டரிங் ஊழியர்கள் நிஹாலை தடிகள், பெல்ட்கள் கொண்டு தாக்கினர். சக பயணிகள் நடுவேறி தடுக்க முயன்றும், தாக்குதலை நிறுத்தவில்லை. சிலர் தங்களது மொபைல் போன்களில் அந்த காட்சிகளை பதிவு செய்தனர்.

ஜான்சி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பினா நிலையத்தை அடைந்தபின், நிஹால் ரெயில்வே காவல்துறையிடம் புகார் அளிக்க முயன்றார். ஆனால் சம்பவம் வேறு ரெயில் எல்லைக்குள் நடந்தது எனக் கூறி, காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இது சமீபத்திய சம்பவமல்ல எனவும், வீடியோ பழையதாக இருக்கலாம் என்றும் வடக்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.  


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railways passenger Attack Viral Video 


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->