விஜய் தலைமையில் கூட்டணி – டுப்பான எடப்பாடி! விஜயின் குரலாக பேசினாரே! தவெகவை விட்டு விளாச தொடங்கிய அதிமுக! பரபரக்கும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கியமாக, தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் விஜய்க்கே வழங்கப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க வகையில்,“தமிழகம் முழுவதும் கோடானுகோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மை சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும்,”என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு அதிமுக – தவெக கூட்டணி உறுதியாகும் எனக் கூறி வந்த நிலையில், இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு பெரிய பாலிடிக்கல் செட்பேக் ஆக மாறியுள்ளது.

சமீபத்தில் குமாரபாளையம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி,“அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும்,”என்று கூறியிருந்தார். அப்போது கூட்டத்தில் தவெக கொடிகள் பறக்க, அதைப் பார்த்து அவர்,“கொடி பறக்குது... கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே!”
என்று கூறியிருந்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் தொலைபேசியில் பேசினார் என்றும், 2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற கூட்டணியாகச் சேர்வது குறித்து ஆலோசனை நடந்ததாகவும் வட்டாரத் தகவல்கள் கூறின.

விஜய் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் “முதல்வர் வேட்பாளர் விஜய்” என அறிவிக்கப்பட்டதுடன், கூட்டணி முடிவை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே வழங்கப்பட்டதால், அதிமுகவினர் கடும் விரக்தியில் உள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவினர் வெளிப்படையாக பேசியிருந்தனர். சட்டசபையில்கூட எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவாக அரசு மீது விமர்சனம் செய்திருந்தார்.

அப்போது அவர் கூறியிருந்தார்:“கரூரில் ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூறாய்வு நடத்தப்பட்டதெப்படி?கள்ளச்சாராய விபத்துக்குப் போகாத முதல்வர் இங்கு மட்டும் ஏன் சென்றார்?அரசு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது.”

ஆனால் இப்போது விஜய் தனது கட்சியை தனித்த பாதையில் முன்னேற்ற முடிவெடுத்ததால், அதிமுக தரப்பினர் “விஜய்க்கு ஆதரவு கொடுத்தது வீணானது” என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

விஜயின் அறிவிப்புக்குப் பிறகு, அதிமுகவினர் ஊடக விவாதங்களில் கடுமையாக தாக்கி பேச தொடங்கியுள்ளனர். சிலர் கரூர் விவகாரத்திலும் விஜய்க்கு பங்குண்டு என குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரு பக்கம் தவெக கட்சியின் தீர்மானம் விஜயின் அரசியல் வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாக அமைய, மறுபக்கம் அது அதிமுகவிற்கு புதிய தலைவலி ஆக மாறியுள்ளது.

தவெக பொதுக்குழுவின் இந்த தீர்மானம்,விஜயை முதல்வர் வேட்பாளராக உறுதி செய்கிறது,கூட்டணி முடிவை முழுவதுமாக அவரது கட்டுப்பாட்டில் வைக்கிறது,அதிமுகவுடன் இணையும் வாய்ப்பை குறைத்து,விஜயின் சுயாதீன அரசியல் பயணத்துக்கு புதிய திசை காட்டுகிறது.

இதனால், 2026 சட்டமன்றத் தேர்தல் விஜய் vs ஸ்டாலின் என நேரடி போட்டியாக மாற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay led alliance Edappadi He spoke as Vijay voice AIADMK has started to spread by leaving TvkThe political arena is in turmoil


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->