கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டும் - முக்கிய தக்கவை வெளிட்ட டிடிவி தினகரன்!
Kodanadu case AMMK TTV Dhinakaran ADMK Edappadi Palaniswami
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைச் சுற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிர குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியுள்ளார்.
அதில், "கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தின் பின்னணி யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் சசிகலா சிறையில் இருந்தார். நானும் டெல்லியில் விசாரணைக்கு சென்றிருந்தேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி தான் கொடநாடு பங்களாவுக்கு சென்று கோப்புகளை தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் எந்த கோப்புகளை தேடினார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்களைச் சார்ந்த சில முக்கிய கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன. அந்த கோப்புகளை நான் தான் கிழித்தெறிந்தேன். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே கேள்வி.
கொடநாடு சம்பவம் நடந்த போது யார் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்? எடப்பாடி பழனிசாமி தான் அந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தார். அதனால், இந்த வழக்கின் உண்மையான முகம் வெளிவர வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்."
டிடிவி தினகரனின் இந்த குற்றச்சாட்டு, கொடநாடு வழக்கை மீண்டும் அரசியல் மையமாக்கியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையனும் இதேபோல் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kodanadu case AMMK TTV Dhinakaran ADMK Edappadi Palaniswami