அதிமுகவிற்கு 3வது இடம்... திமுக- தவெக இடையே தான் போட்டி- டி.டி.வி. தினகரன் பேட்டி!
TN Assemmbly Election 2026 DMK TVK AMMK TTV Dhinakran
சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில், “2026ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய போட்டி திமுக மற்றும் தவெக இடையே தான் இருக்கும். அதிமுக, தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொருத்தவரை, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்.
விஜய் தலைமையில் வலுவான கூட்டணி உருவானால், அது தேர்தலில் கடுமையான போட்டியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார்.
அத்துடன், சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாகவும், “அதற்கான முக்கியக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான்” என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், தற்போது அவை தொடக்கநிலையிலேயே இருப்பதாகவும் அவர் விளக்கினார். “இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. ஆனால், அரசியல் நிலவரம் விரைவில் தெளிவாகும்,” எனவும் தினகரன் தெரிவித்தார்.
English Summary
TN Assemmbly Election 2026 DMK TVK AMMK TTV Dhinakran