பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்ய முடியாது : மீறினால் என்ன நடக்கும் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில்ஒரு கிராமம்  ஒன்றில் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனையும் மீறி காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மனக்பூர் ஷெரீப்  என்ற கிராமம்.இங்கு நடைபெற்ற கிராம சபையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் போட்டு, அதை கடந்த மாதம் 31-ம் தேதி நிறைவேற்றினர். அதில் பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்ய முடியாது,மீறி காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது  தற்போது சர்ச்சையாகி உள்ளது.

மனக்பூர் ஷெரீப் கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி, திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகிளில் ஒருவர் கூறுகையில், "இது தண்டனை அல்ல. எங்களது பாரம்பரிய மரபு  நாங்கள் காதல் திருமணம் அல்லது சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதை எங்கள் பஞ்சாயத்தில் நாங்கள் அனுமதிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த காதல் திருமண தடை தீர்மானத்துக்கு பெரும்பாலான கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதாகவும், தங்கள் வழியை மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் மனக்பூர் ஷெரீப் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One cannot marry in love without the consent of the parents Do you know what will happen if you violate this?


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->