ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கலாமா...? - 'கிங்டம்' படத்திற்கு தடை விதிக்க நாம் தமிழர் கட்சி கண்டன போராட்டம்...!
Should Eelam Tamils be portrayed incorrectly Naam Tamil Party protests against ban on the film Kingdom
அண்மையில் வெளியான KINGDOM தெலுங்கு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இது தற்போது கண்டனத்திற்கு உரிய விஷயமாக மாறியுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள்:
மேலும்,"கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம்.வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழ சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது" என்று தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து 'கிங்டம்' படம் தமிழகத்தில் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், திரையரங்குகளில் படம் வெளியானது. இதையடுத்து தியேட்டர்கள் முன் காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, 'கிங்டம்' படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி,ராமநாதபுரத்திலுள்ள ஒரு தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டதால் 'கிங்டம்' படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Should Eelam Tamils be portrayed incorrectly Naam Tamil Party protests against ban on the film Kingdom