ஜல்லிக்கட்டின் பெருமையை அறியும் வகையில் "வடம்" படம் அமையும் - நடிகர் விமல்.!
actor vimal speech about vadam movie
பிரபல நடிகர் விமல் தற்போது 'வடம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்தப் பூஜையில் தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் கேந்திரன், நடிகர் விமல், நடிகை சங்கீதா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விமல் தெரிவித்துள்ளதாவது:- "ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாடுகளை விரட்டிச்சென்று பிடிப்பது, மற்றொன்று கயிறு கட்டி சுற்றி நின்று பிடிப்பது. இதில் 2-வது வகை ஜல்லிக்கட்டுக்கு வடம் என்றும் பெயர் உண்டு.
இதனை மையமாக கொண்டே 'வடம்' படம் தயாராக உள்ளது. இந்தப் படம் நிச்சயம் ஜல்லிக்கட்டின் பெருமையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த படம் நம்பும் வகையிலான ஒரு ஆக்ஷன் கலந்த படமாகவும் இருக்கும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor vimal speech about vadam movie