விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு.. மீண்டும் நடிகை மீரா மிதுன் கைது!
Failure to appear for the inquiry Actress Meera Mithun arrested again
பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகளான நிலையில், தனிப்படை போலீசாரால், நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவருக்கு எதிராக கண்டனம் வலுத்தது .இதையடுத்து அவர் மீது அந்த அமைப்புகள் போலீசில் புகார் அளித்தன. அப்போது இப்புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இதையடுத்து இருவரும் ஜாமின் பெற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை, நடந்து வருகிறது.ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகை மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகததால் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகளான நிலையில், நடிகை மீரா மிதுனை தனிப்படை போலீசாரால், கண்டுபிடிக்க முடியவில்லை.இதனால் 'பிடிவாரன்ட்' உத்தரவை நிறைவேற்றாத போலீசாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகை மீரா மிதும் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், டெல்லி போலீசார் உதவியுடன், டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவால், மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவரை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Failure to appear for the inquiry Actress Meera Mithun arrested again