உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது - அஜித்குமாருக்கு மனைவி ஷாலினி வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இத்துடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்  அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், திரைத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகரும் கணவருமான அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 
சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷாலினி, பதிவிட்டுள்ளதாவது:-

"நீங்கள் உங்கள் தொழிலை மட்டும் உருவாக்கவில்லை. நீங்கள் மக்களை சுமந்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து எல்லாவற்றையும் அருமையாக செய்துள்ளீர்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. 33 வருடங்கள் முடிந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shalini wishes to actor ajithkumar for 33 years complete in film industry


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->