அவதூறாக பேசிய மேலும் இருவர் கைது!!! கன்னட நடிகை ரம்யா வலைதள விவகாரம்...!
Two more people arrested for defamation Kannada actress Ramya insta issue
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகையும், அரசியல்வாதியுமான ''ரம்யா''. இவர், அண்மையில் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நடிகை ரம்யாவை பற்றி இன்ஸ்டா வலைதளத்தில் சிலர் அவதூறாகவும், தகாத வார்த்தையிலும், ஆபாசமாகவும் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் காவலில் ரம்யா குறித்து ஆபாச கருத்து வெளியிட்ட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி,கடந்த 2 தினங்களுக்கு முன்பு சித்ரதுர்காவில் ஒருவரையும், கோலாரை சேர்ந்த ஒருவரையும் கைது செய்யப்பட்டதோடு,சிலரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மேலும் கங்காதர் மற்றும் ஓபண்ணா என்ற 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரில் ஒருவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் என்றும், மற்றொருவர் நடிகர் தன்வீரின் ரசிகர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. தனக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்களை கைது செய்துள்ள காவலர்களுக்கு நடிகை ரம்யா பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர்:
இதுகுறித்து காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங் கூறுகையில்,"நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
சிலரது சமூக வலைதள முகவரியை அளிக்கும்படி இன்ஸ்டாகிராமுக்கு சைபர் கிரைம் காவலர்களால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது கைதானவர்கள் எந்த நடிகரின் ரசிகர் என்பது குறித்து விசாரணைக்கு பின்பு தான் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Two more people arrested for defamation Kannada actress Ramya insta issue