ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை..! முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!
Court closes case against former minister Satyendar Jain in corruption case citing lack of evidence
ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது பொதுப்பணித் துறையில் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின். அப்போது, ஊழல் தொடர்பாக சத்யேந்தர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது 2018-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதாவது, பொதுப்பணித் துறையில் முறைகேடாக ஆள்களை சேர்த்தல், நிதி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில் சத்யேந்தர் ஜெயின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன், விசாரணையில் எந்த குற்றச்செயலோ அல்லது அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களோ நிரூபிக்கப்படவில்லை. இதன்காரணமாக இவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ கோரியுள்ளதாகவும் நீதிபதி திக் வினய் சிங் கூறினார்.
அத்துடன், இந்த வழக்கில் பண ஆதாயம், சதி அல்லது ஊழல் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்றும், ஏதேனும் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் கூறிய நீதிபதி கூறியுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பான சிபிஐ-யின் இறுதி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்துள்ளார். ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு வெறும் சந்தேகம் மட்டும் போதாது என்றும், குறைந்தபட்சம் ஆதாரம் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Court closes case against former minister Satyendar Jain in corruption case citing lack of evidence