கேரளாவில் 09-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாட்ஜில் அறையில் பாலியல் பலாத்காரம்: தாயின் ஆண் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் கைது..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கண்ணூர் அருகே மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனீஷ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கண்ணூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு பிளஸ் ஒன் மற்றும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 02 மகள்கள் உள்ளனர்.

நாளடைவில் இளம்பெண்ணுக்கும் ஆட்டோ ஓட்டுநர் அனீஷுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 02 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கண்ணூர் தளிப்பறம்பு அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

அப்போது குறித்த  இளம்பெண் தன்னுடைய இரு மகள்களையும் லாட்ஜுக்கு அழைத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த லாட்ஜில் வைத்து ஆட்டோ ஓட்டுநர் அனீஷ், இளம்பெண்ணின் 02-வது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அவளது அக்கா  பிளஸ் ஒன் படிக்கும் சிறுமி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சிறுமி தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர்களது தாய் இதனை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கிடையே சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியை நடத்திய விசாரணையில் பலாத்கார செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாதமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில்,  போலீசார் வழக்கு பதிவு செய்து அனீஷை கைது செய்துள்ளனர். பெற்ற மகளுக்கு நடந்த கொடூரத்தை மறைத்த தாயின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uto driver arrested for raping 9th grade student in Kerala lodge room


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->