மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும், 4,000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி..!
Edappadi Palaniswami promises to provide laptops to students again and set up 4000 Amma mini clinics
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், 2026 தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தென்காசி சுற்றுப்பயணத்தின் போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாவது: அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே அதிமுக ஆட்சியில் தான் கொரோனாவை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுத்த மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
-vyfzu.png)
அத்துடன், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து தென்காசியை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசில் கல்வியில் சாதனை படைத்தோடு, கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வரும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுக ஆட்சி அமைந்ததும் 4,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்றும், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,பொங்கல் சிறப்புத் தொகுப்பு மீண்டும் சிறப்பாக வழங்கப்படும் என்றும், இலவச வேட்டிச் சேலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் தீபாவளி அன்று மகளிருக்கு சிறப்பான சேலை வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami promises to provide laptops to students again and set up 4000 Amma mini clinics