திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார்களிடம் தீவிர சோதனை: 02 டிஎஸ்பிக்கள் தலைமையில் 50 போலீசார் கண்காணிப்பு..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்கள் லட்சக்கணக்கான பக்தர்கள்  கிரிவலம் செய்து வருகின்றனர். ஏனைய சாதாரண நாட்களிலும் ஏராளமானோர் மக்கள்  கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். 

இம்மாத பௌர்ணமி கிரிவலம் வரும் 08-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 08-ஆம் தேதியை தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைக என இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் இந்த மாதம் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என தெரிகிறது. 

இது தொடராக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்போது, எஸ்பி சுதாகர், கோயில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன்போது ஆட்சியர் பேசுகையில், கிரிவல பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான வசதிகளை கோயிலில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

கிரிவலத்தின் போது முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தரிசன வரிசையில் முன்னுரிமை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கிரிவலப்பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கவும், கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும் மாநகராட்சி சார்பில் கூடுதல் ஊழியர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கோயில், கிரிவலப்பாதை போன்ற இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுவதோடு, 108 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மேலும், 09 இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களில், பக்தர்களுக்கு தேவையான நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆட்டோக்கள் மற்றும் கியூஆர் கோடு இல்லாத ஆட்டோக்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிரிவல பாதையில் வசிக்கும் சாமியார்கள் சிலர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபடுவதுடன், பக்தர்களுக்கு இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்து வருகிறது.

இதை தடுக்க எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் 02 டிஎஸ்பிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை கிரிவல பாதையில் தங்கியிருக்கும் சாமியார்களின் உடமைகளை சோதனையிட்டுள்ளனர். அவர்கள் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் ஏதாவது பதுக்கி வைத்துள்ளார்களா வேண்டும் தீவிர சோதனை செய்துள்ளனர். மேலும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும், கிரிவலம் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது எனவும் சாமியார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2025 ஆடி மாத பௌர்ணமி வரும் 08-ஆம் தேதி பகல் 02.43 மணிக்கு தொடங்கி, 09-ஆம் தேதி பகல் 02.18 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, திருவண்ணாமலையில் இந்த நேரமே கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are conducting intensive searches on the priests on the Giriwala road in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->