காஷ்மீரில் எல்லையில் மீண்டும் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு: பதிலடி கொடுத்துள்ள இந்திய ராணுவம்..!
Indian Army retaliates to Pakistans repeated cross border firing in Kashmir
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளமை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலுக்கு இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
இது குறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவம் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோடு எல்லையை மீறி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பிரிவில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், முக்கியமாக ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே 15 நிமிடங்களுக்கு துப்பாக்கிச்சூடு நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சண்டையின் போது அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்துாருக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indian Army retaliates to Pakistans repeated cross border firing in Kashmir