அழகப்பரின் வள்ளல் தன்மைக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்..அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!  - Seithipunal
Seithipunal


காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் 75-ஆம் ஆண்டு பவளவிழா .அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர்.

அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழா சிறப்பாக நடைபெற்றது.முதல் நாள் நிகழ்வு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தரும் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பள்ளிக்குழு தலைவருமாகிய பேரா.சு.ரவி தலைமையில் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேனாள் தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் நிதியுதவில் வள்ளல் அழகப்பர் மார்பளவு சிலை நிறுவப்பட்டது. முன்னால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து வழங்கிய நிதியுதவியின்கீழ் நவீன கணினி ஆய்வுக்கூடம் மற்றும் தலைமை ஆசிரியர் நவீன அறை ஆகியவற்றை துணைவேந்தர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர். த. ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் பேரா.சு.ரவி தலைமையுரை ஆற்றினார். மேனாள் துணைவேந்தர் முனைவர்.சொ.
சுப்பையா சிறப்புறையாற்றினார். 75-ஆம் ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வகையில் இந்திய அரசு அஞ்சல்துறை சார்பில் வள்ளல் அழகப்பரின் தபால்தலை வெளியிடப்பட்டது. அவற்றை துணைவேந்தர் பேரா.க.ரவி வெளியிட மேனாள் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் துணைவேந்தரால் கௌரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்வாக  முதலில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கபட்ட 75-ஆம் ஆண்டு நினைவு நுழைவு வாயிலை (Entrance Arch) திறந்து வைத்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வள்ளல் அழகப்பரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பல்கலைக்கழக வளர் தமிழ் நூலகம், வள்ளல் அழகப்பரின் அருங்காட்சியகம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டு மைய அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்விற்கு அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் வரவேற்புரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி  தலைமையுரையாற்றினார்.  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்கினார். 

அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  சிறப்புரையாற்றினார்.  தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக உயர்ந்துள்ளது. இதற்கு அயராது உழைத்த ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு தலைசிறந்த பள்ளியாகும். இப்பள்ளி பல்வேறு ஆளுமைகளை உருவாக்கித் தந்துள்ளது. ஏழு வள்ளல்களை தாண்டி 8-வது வள்ளலாக அழகப்பர் இடம் பெறுகிறார். அழகப்பரின் வள்ளல் தன்மைக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார். கல்விக்காக தான் குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர் வள்ளல் அழகப்பர் என புகழாரம் சூட்டினார். அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு வழங்க ஆவண செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர். சட்ட மன்ற உறுப்பினர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும் கிடைக்க வருகிற 8-ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இக்கோரிக்கையினை எடுத்துக் கூறி நல்ல முடிவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி  வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாணவர்களின் சார்பில் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக்குழு உறுப்பினருமாகிய  ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர், பேரா.அ.செந்தில்ராஜன், தேர்வாணையர் முனைவர்.M.ஜோதிபாசு, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா.வே. பழனிச்சாமி, பேரா.சி.சேகர், பேரா.சு.இராசாராம், காரைக்குடி மாநகர மேயர் சே. முத்துத்துரை, துணைமேயர் ந.குணசேகரன், காரைக்குடி வணிகர் சங்கத் தலைவர் சாமி திராவிடமணி மற்றும் காரைக்குடி மாநகர முக்கிய பிரமுகர்கள், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மேனாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மேனாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பவள விழா ஆண்டுமலர் வெளியிடப்பட்டது.

அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் கீழ் ரூபாய் இருபது இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான கழிவறை கட்டிடத்தினை  அமைச்சர் கூட்டுறவுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். நிகழ்வில் புதிய சத்துணவுக் கூடத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி ஸ்ரீமதி திறந்து வைத்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We are always indebted to the noble qualities of the beautiful lord Minister Anbil Mahesh Poyyamozhis speech


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->