இனி ஒடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..! பயங்கரவாதிகளுக்கு முப்படை தலைமை தளபதி எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


பயங்கரவாதிகள் இனிமேல் பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட ஒளிய முடியாது. அவர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: நவீன போர்கள் குறுகியதாகவும், இலக்கு வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது முறையான அறிவிப்புகள் இல்லாமல் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டதாகவும் மாறி வருகிறதாகவும், அதிகாரப் பூர்வமாக போரை அறிவிக்காமலேயே அரசியல் நோக்கங்களை அடைய பலத்தை பயன்படுத்த நாடுகள் அதிகளவில் முனைகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போரும் அரசியலும் நெருங்கிய தொடர்புடையவை என்றும், அரசியல் நோக்கங்களை அடைவதற்காகவே போர்கள் பெரும்பாலும் நடத்தப் படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இன்று, ஆபரேஷன் சிந்தூர் போன்ற மிகக் குறுகிய, துல்லியமான போர்களை நாம் காண்கிறோம் என்று அணில் சவுகான் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதிகள் இனிமேல் பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட ஒளிய முடியாது ஏனெனில் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். மேலும், எந்தவொரு வன்முறைச் செயலுக்கும் எதிராக நாங்கள் தீர்க்கமாகச் செயல்படத் தயாராக உள்ளோம் என்றும், இனி நாம் 500 கிலோ குண்டுகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. கனமான, மிகவும் பயனுள்ள ஏவுகணைகள் மற்றும் மிகவும் துல்லியமான இலக்குகளுக்கான நேரம் வந்துவிட்டது வேண்டும் பேசியுள்ளார்.

மேலும், இனி முறையான அறிவிப்புகளுடன்  மோதல்கள் தொடங்காமல் போகலாம். இன்றைய கால சூழ்நிலைகளின் எதார்த்தம் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்தியப் படைகளால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் அதிவேக துல்லியமான தாக்குதல் என்றும், போருக்கும் அமைதிக்கும் இடையிலான வேறுபாடு குறைந்து வருகிறதாக பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorists cannot hide even on the Pakistan border warns Tri Services Chief


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->