கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து குழந்தை பலி..வத்தலக்குண்டு அருகே சோகம்!
A child fell into the boiling curry and lost their life tragedy near Vattalakundu
வத்தலக்குண்டு அருகே குலதெய்வ வழிபாட்டு விழாவில் கறிக்குழம்பில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் சில நேரங்களில் அசம்பாவிதமான நிகழ்வுகளை சந்திக்க நேர்கிறது. ஏன் என்று சொன்னால் சமீப காலமாக செய்தித்தாளை எடுத்து பார்க்கும் போதெல்லாம் குழந்தை இறப்பு என்று செய்தி மிகுந்த மனவேதனை தருகிறது.
குறிப்பாக சொல்லப் போனால் பெற்றோரின் கவனக்குறை தவழும் குழைந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பது ,கொதிக்கில் எண்ணெயில் விழுவது, குழம்பு பாத்திரத்தில் விழுவது போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் நம் மனதையே உலுக்கியது, இதனை தடுக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் கையாள வேண்டும் ,சமையலறை பக்கத்தில் குழந்தைகளை கொண்டு சொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் சமையல் செய்யும்போதும் ஒரு சில சமயங்களில் அவர்களை நாம் பாதுகாப்பது நம்முடைய கடமை ஆகும் அப்படி செய்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழாது என்பது நிதர்சனமான உண்மை.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேஆடி மாதக் குலதெய்வ வழிபாட்டுக்காக விழா நடைபெற்ற இடத்தில், சிவக்குமார் என்பவரின் 2 வயது மகன் ஸ்ரீதரன் விளையாடிக் கொண்டிருந்த போது,
வெந்துவைத்திருந்த கறிக்குழம்பு பாத்திரத்தில் தவறி விழுந்து,கறிக்குழம்பு தயார் செய்து அதனை பாத்திரத்தில் வைத்து விட்டு அங்கிருந்தவர்கள் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தபோது குழந்தை விழுந்துள்ளது.
பின்னர் சிறுவனை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.உடலின் பெரும்பாலான பகுதி வெந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் குலதெய்வ வழிபாட்டுக்கு வந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகம் நிலவியது. சிறு அலட்சியம் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
English Summary
A child fell into the boiling curry and lost their life tragedy near Vattalakundu