மத்திய இணையமைச்சராக எல்.முருகன் தனது அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்!! - Seithipunal
Seithipunal


டெல்லி : மத்திய இணை அமைச்சராக எல். முருகன் தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றிய ஆட்சியைப் பிடித்திருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடங்களில் கைப்பற்றவில்லை.நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி பிரதமர் பதவியேற்பு விழாவில் எல்.முருகன் அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார். அதன் மூலம் மீண்டும் எல். முருகன் மத்திய அமைச்சர் ஆகிறார் என்பது உறுதியானது. இந்த நிலையில் எல்.முருகன் தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்கவை  எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எல்.முருகன். கடந்த ஆட்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையுடன் கால்நடை துறை இணை அமைச்சராக பணியாற்றினார். இந்த முறை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை உடன் கூடுதலாக நாடாளுமன்ற விவகாரத்துறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L Murugan assumed responsibility in his office as Union Minister of State


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->