தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 'கிராம சபை' கூட்டங்கள் - தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல். குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். 

கிராம சபை கூட்டம் நடைப்பெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுதலை தடுக்கும் வகையில் விவாதிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நூறு நாள் வேலை திட்டத்தின் விவரங்களை பகிர்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

நடக்க கூடிய இந்த கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை, வரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kirama Sabha 2 Oct 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->