#BigBreaking: வெளியான அந்தரங்க வீடியோ., பதவியை ராஜினாமா செய்தார் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


படுக்கையறை வீடியோ வெளியானதால், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி படுக்கையறையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிது.

இதுகுறித்து காவல்துறையில் சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹல்லி என்பவர் புகார் அளித்தார். அவரின் அந்த புகாரில், "கர்நாடக மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த பாலியல் குற்றச்சாட்டை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனக்கு அந்த பெண்ணின் பெயர் கூட எனக்குத் தெரியாது. எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று காங்கரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில், சற்றுமுன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அமைச்சரின் ராஜினாமா கடித‌த்தை அம்மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Minister Ramesh Jarkiholi resign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->