#BREAKING || கர்நாடக அமைச்சரவை முதற்கட்ட பட்டியல் வெளியீடு.. கார்கே மகனுக்கும் அமைச்சர் பதவி..!!
Karnataka govt Preliminary Cabinet List Released
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்க உள்ளார். இதனடையில் பதவி ஏற்க உள்ள முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

மொத்தம் 8 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே ஜார்ஜ், எம்,பி பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி, ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமதுகான் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவையானது சமூக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதர பிற்படுத்த வகுப்பைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் ஒக்காலிக வகுப்பை சேர்ந்த டி.கே சிவகுமார் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

அதேபோன்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும், கிறிஸ்தவ சமுதாயத்தில் இருந்து ஒருவருக்கும், பழங்குடியின வகுப்பில் இருந்து ஒருவருக்கும் என 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை இன்று பதவி ஏற்க உள்ளது. சமுதாயத்தின் அடிப்படையில் அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளதால் கர்நாடகா அரசியலில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Karnataka govt Preliminary Cabinet List Released